ஐபிஎல் தொடரில் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள்.
இதில் முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய நோ-பால், பட்லரின் விக்கெட்டை காப்பாற்றியது. இதனால் பட்லர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் இருந்த ஜெய்ஸ்வால் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் 35 ரன்கள் எடுத்து பட்லர் வெளியேற, அவரையடுத்து அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்க, மறுமுனையில் படிக்கல் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணி சிறப்பாக ஆடி, அணியின் ஸ்கொரை உயர்த்தினார்கள்.
55 ரன்கள் அடித்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைதொடர்ந்து களமிறங்கிய ஹெட்மேயர், அதிரடியாக ஆடி 32 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் அடித்தனர். 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.
முதலில் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 2 ரன்களில் பெவிலியன் திரும்ப அடுத்து வந்த அபிஷேக் ஷர்மா 9 ரன்களுடன் கிளம்பினார். ஆனால் அடுத்தடுத்து களமிறங்கிய திரிபாதி, பூரான் ஆகியோர் டக் அவுட் ஆகினர்.
ஐதராபாத் வீரர் மர்க்ராம் மட்டும் பொறுமையாக ஆடினார். அவருடன் இணைந்த ஸ்டிபர்ட் 24 ரன் எடுத்தபோது அவுட் ஆகினார். 16.4 ஓவரில் 6 விக்கெட் இழந்து 96 ரன்களுடன் களத்தில் இருந்தது.
இதையடுத்து 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கயி வாஷிங்கடன் சுந்தர் அதிரடியாக விளையாடினார். ஒரு பக்கம் மார்க்ரம் ரன்கள் எடுக்க உடன் வாஷிங்டனும் தனது பங்கினை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து 40 ரன் எடுத்திருந்த வாஷிங்கடன் போல்ட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இதையடுத்து புவேனேஷ்குமார் களமிறங்கினார், மறுமுனையில் மர்க்ராம் கடைசியாக சிக்சர் விளாசி 57 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன் மட்டுமே எடுத்தது.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.