‘யாருக்கு தகுதியில்ல.. இப்ப புரியுதா’… இதுக்கு பேருதான் ‘கர்மா’… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தருக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்..!!

Author: Babu Lakshmanan
14 November 2022, 10:06 am
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 2வது முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்தும், இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்தும் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

pakistan - updatenews360

முன்னதாக, சூப்பர் 12 சுற்றில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவி, தொடரில் இருந்து வெளியறியது. அப்போது, இந்திய அணி பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் உள்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

england - updatenews360

அதில் குறிப்பாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தார். எம்சிஜ மைதானத்தில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவோ அல்லது விமானத்தில் மெல்போர்ன் வரவோ கூட இந்தியாவுக்கு தகுதி இல்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், டி20க்கான அணியில் விளையாட தகுதியில்லா ஷமியை தேர்வு செய்ததாகவும், இங்கிலாந்தில் அடில் ரஷித்தை விளையாடச் செய்த நிலையில், சஹாலை ஏன் விளையாட செய்திருக்கக் கூடாது..? என்று கேள்வி எழுப்பினார்.

அவரது இந்த விமர்சனம் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய வீரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

shami - updatenews360

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தத நிலையில், ஷோயப் அக்தருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் உடைந்த இதயத்தின் எமோஜியை பகிர்ந்து, ‘மன்னிக்கவும் சகோதரா. இதை கர்மா என்பார்கள்’ என ஷமி பதில் அளித்துள்ளார். அது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

shami- updatenews360

அதே நேரத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியை ஷமி ட்வீட் மூலம் பாராட்டியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் அற்புதமான பந்து வீச்சு குறித்தும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 411

    0

    0