ஆஸி.,க்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து… அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது இந்த அணியா..? ரொம்பவே டஃப் தான்…!!
Author: Babu Lakshmanan5 November 2022, 5:34 pm
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை தோற்கடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ன் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இன்று மோதின. இதில், முதலில் பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிசங்கா 67 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 74 ரன்கள் குவித்தது. இதனால் 15 ஓவரில் ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென பொங்கி எழுந்த இலங்கை பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். அந்த அணி 111 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து, ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 12 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டியது நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது. கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி உலககோப்பையில் இருந்து வெளியேறியது.
4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் நடக்கும உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது அந்த நாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் 1987 நடந்த உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா 1992ல் உள்ளூரில் நடந்த உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறியது. அதேபோல, ஆசியா நாடுகளில் நடந்த 2021ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பெற்ற ஆஸ்திரேலியா, தற்போது சொந்த ஊரில் நடக்கும் தொடரில் சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறி விட்டது. ‘
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் 2016ல் இறுதிப் போட்டிக்கும், 2017ல் அரையிறுதிக்கும் தகுதி பெற்ற அந்த அணி, 201ல் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன்பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து, 2021ல் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி வரைக்கு வந்த இங்கிலாந்து, மீண்டும் அரையிறுதிக்கு முனனேறியுள்ளது.
நாளை ஜிம்பாப்வேவுடன் நடக்கும் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதில் இங்கிலாந்து – இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தும்.
0
0