டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12ல் இடம்பெற்றுள்ள அணிகளின் முழுவிபரம் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. சூப்பர் 12 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டது. நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நமீபியா, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடின.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டங்களில் குரூப் ஏ பிரில் இலங்கை மற்றும் நெதலார்ந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. டி20 உலகக்கோப்பையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் உடன் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம், இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம் குரூப் 1ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
நாளை முதல் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. உலகமே எதிர்பார்த்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் 23ம் தேதி நடக்கிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.