லிட்டன் தாஸ் அதிரடி… ஆட்டம் மழையால் பாதிப்பு… D/L முறை யாருக்கு சாதகம்..? இந்தியா – வங்கதேச ரசிகர்கள் இடையே திக்திக்…!!

Author: Babu Lakshmanan
2 November 2022, 4:25 pm

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. அடிலெய்டில் இன்று நடந்து வரும் 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

rohit sharma - updatenews360

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த கேஎல் ராகுல், இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடினார். அவருடன் கோலியும் நின்று ஆடி ரன்களை குவித்தார். ராகுல் 50 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், கோலி கடைசி வரை நின்று அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

virat kohli  - updatenews360

இதனால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. கோலி 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ், சாண்டோ இணை அதிரடியாக விளையாடியது. லிட்டன் தாஸ் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால், வங்கதேச அணி பவர் பிளேவான 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை எடுத்தது.

litton das- updatenews360

7 ஓவர்கள் முடிவவில் 66 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆட்டம் எப்போது தொடங்கப்படும் என்று தெரியாத நிலையில், வங்கதேசம் மற்றும் இந்திய ரசிகர்கள் பெரும் குழப்பத்திலும், அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.

தற்போது, பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, வங்கதேச அணிகள், இதுவரை 3 போட்டிகள் விளையாடியுள்ளன. அதில், 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதலிடத்தை பிடிக்கும். மேலும், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இன்னும உறுதி செய்யும்.

rain- updatenews360

இப்படியிருக்கையில், தற்போது ஆட்டம் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டால், வெற்றி, தோல்வியை இரு அணி வீரர்களும் விளையாடி தீர்மானிப்பார்கள். ஒருவேளை, இத்துடன் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டால், அது இந்திய அணிக்கு பாதகமாகிவிடும்.

அதாவது, டக்வொர்த் லூயிஷ் முறைப்படி, 7 ஓவர்களில் வங்கதேச அணி 49 ரன்கள் எடுத்தாக வேண்டும். ஆனால், தற்போது, 66 ரன்கள் எடுத்திருப்பதால், 17 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, மழை நின்று ஆட்டம் தொடங்க வேண்டும் என்றே இந்திய ரசிகர்கள் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பார்கள் என்பதே நிஜம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 446

    0

    0