இதுக்கு பேரு என்ன..? பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
3 November 2022, 4:50 pm

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெற்றதாக கூறி வரும் பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று அடியெல்டில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, கோலி (64 நாட் அவுட்), ராகுல் (50) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது.

பின்னர், கடின இலக்கை நோக்கி விளையாடி வங்கதேச அணி முதல் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியது. இந்த சூழலில், மழை குறுக்கிட்டதால், D/L முறைப்படி ஓவரும், இலக்கும் குறைக்கப்பட்டது.

அதன்படி, 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக தீர்மானிக்கப்பட்டது. அதாவது, வங்கதேச அணி 54 பந்துகளில் 85 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. பின்னர், மீண்டும் ஆட்டம் தொடங்கிய பிறகு, இந்திய அணியின் கையே ஓங்கியது. வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

https://twitter.com/Smeera_Singh/status/1588096792486645760

இந்தப் போட்டியில், கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது நோ-பால் கேட்டதும், பீல்டிங் செய்யும் போது ஃபேக் ஃபீல்டிங் செய்ததாகவும் கூறி, வங்கதேச அணி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களோடு, பாகிஸ்தான் ரசிகர்களும் சேர்ந்து இந்திய வீரர்களையும், பிசிசிஐ-யும் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்ததாக கூறி வரும் பாகிஸ்தான், வங்கதேச அணி ரசிகர்களுக்கு, இந்திய அணியின் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் போட்டியின் போது, விக்கெட் கீப்பர் டீ-காக் விநோதமான முறையில் ஏமாற்றி, ஃபக்கர் ஜமானின் விக்கெட்டை எடுத்த வீடியோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும், இதற்கு பெயர்தான் FAKE FIELDING என்றும், விராட் கோலி செய்ததை குறை சொல்ல வேண்டாம் என்றும் இந்திய ரசிகர்கள் கோலிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி