கேஎல் ராகுல், ருத்து-க்கு கல்தா… டி20 உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு ; முழு விபரம் இதோ..!

Author: Babu Lakshmanan
30 April 2024, 4:43 pm

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

ஜுன் 2ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: பட்டப்பகலில் பயங்கரம்… அதிமுக பிரமுகரின் மகன் ஓடஓட வெட்டிக்கொலை ; திருச்சியில் நடந்த கொடூரம்!!

அதன்படி கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விபரம் பின்வருமாறு : ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன்,
ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவித்துள்ளனர்.

அதேவேளையில், ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி வரும், ருத்துராஜ் கெயிக்வாட், கேஎல் ராகுல், இஷான் கிஷான் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

  • gangai amaran explained the copyrights issue on good bad ugly எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்