டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு ; தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு இடம்..!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 6:05 pm

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்த நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹீடா, ரிஷப் பண்ட் ( விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், யுஷ்வேந்திர சஹால், அக்ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், முகமது ஷமி, ஸ்ரேயாஷ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான முன்பாக, இந்திய அணி விளையாடும் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா தொடருக்கான வீரர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்களே இந்த இரு தொடர்களிலும் பங்கேற்கின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?