காயம் காரணமாக தல தோனி விலகல்? என்னடா இது சென்னை அணிக்கு வந்த சோதனை?

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 11:21 am

தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய தோனியை பார்க்கவே ஒரு கூட்டம் கூடியது என்றால் பாருங்கள்.

தோனி சென்னை வந்தது முதல் சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது வரை வீடியோ போட்டோ என அனைத்தையும் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆக்கினார்கள் தோனி ஃபேன்ஸ்.

இன்று தொடங்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை – குஜராத் அணிகள் மோதும் முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப்போட்டியில் களமிறங்கும் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் தோனி விளையாடுவதில் சந்தேகம் என ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து.

சென்னை சேப்பாக்கம் மற்றும் அகமதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மகேந்திரசிங் தோனியின் இடதுகாலின் மூட்டுப்பகுதியில் வலி இருந்ததாவும் இதன் காரணமாக தோனி இன்றைய போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்திருக்கிறது என்று கூறப்பட்டது.

தோனி சென்னை அணியை வழிநடத்தவில்லை எனில் அவருக்கு பதில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. காயம் காரணமாக தோனி விளையாடமாட்டார் எனக் கூறி வந்த நிலையில் தோனி நிச்சயம் இன்றைய போட்டியில் விளையாடுவார் என தகவல் கிடைத்துள்ளது.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி நிச்சயம் பங்கேற்பார் என சென்னை அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?