சீனாவில் கோலாகலமாக தொடங்கியது 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் : கண்களை கவர்ந்த 45 நாடுகளின் அணிவகுப்பு!
19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்துள்ளார்.
பிக் லோட்டஸ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஹாங்ஜோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கில் இதற்கான தொடக்கவிழா நடைபெற்று வருகிறது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் அனைத்து நாடுகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில், அணிவகுப்பிற்கு இந்தியா சார்பாக, ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் ஆகியோர் தேசியக் கோடியை ஏந்தி தலைமை தாங்கினர்.
இன்று சீனாவில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை ஆசிய விளையாட்டு போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் 80,000 பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய இருக்கைகள் உள்ளது.
அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடைபெறுகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.
45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
கடந்த முறை இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.