துவம்சம் செய்த பெங்களூரு அணி… மோசமான சாதனையை படைத்த ராஜஸ்தான் : புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2023, 8:04 pm

இன்று 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள ‘சவாய் மான்சிங்’ மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டு பிளெசிஸ் 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும், அனுஜ் ராவத் 29* ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் ஆடம் ஜம்பா, கே.எம்.ஆசிப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதனையடுத்து, அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்திலே விக்கெட்களை தொடர்ச்சியாக விட்டது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் அடுத்தடுத்து க டக்-அவுட் ஆகினர் .

பின்பு வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹெட்மேயர் மற்றும் 19 பந்துக்கு 35 ரன்களை எடுத்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல் அணி 10.3 ஓவர்கள் முடிவில் 59 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் பெங்களூர் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அதிகபட்சமாக பெங்களூர் அணியில் வெய்ன் பார்னெல் 3 விக்கெட்களையும், மைக்கேல் பிரேஸ்வெல், கர்ண் ஷர்மா இருவரும் தலா 2 விக்கெட்களையும் கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 493

    0

    0