புரோ கபடி லீக் : முதல் முறையாக கோப்பையை வென்ற டெல்லி அணி…

Author: kavin kumar
25 February 2022, 11:06 pm

8-வது புரோ கபடி லீக் போட்டியில் டெல்லி அணி 37-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரை இறுதி போட்டியில் பாட்னா பைரட்ஸ் உ.பி.யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின. பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாகவும், ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 2-வது முறையாகவும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சமமாக மல்லுக்கட்ட போட்டி மிகுந்த பரபரப்பாக சென்றது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதாவது 37-36 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கடைசி நேரத்தில் செய்த தவறால் பாட்னா அணி கோப்பையை இழக்க நேரிட்டது. இந்த சீசனில் 24 போட்டிகளில் 304 ரெய்டு பாயிண்டுகள் பெற்ற பவன் ஷெராவத், சிறந்த ரெய்டராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் 24 போட்டிகளில் 89 புள்ளிகளைப் பெற்ற முகமதுரேசா ஷாத்லூயி, சிறந்த தடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் புதிய இளம் வீரராக மோகித் கோயத்தும், இந்த சீசனில் மிகவும் மதிப்பு மிக்க வீராக நவீன் குமாரும் (17 போட்டிகளில் 207 ரெயிடு பாயிண்டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

  • srikath shared about his first film dropped which ar rahman composed முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்