லக்கே இல்லாத லக்னோ.. ஏலத்தில் விலை போகாத பட்டிதரின் நேர்த்தியான ஆட்டம் : குவாலிபையருக்கு தகுதி பெற்று பெங்களூரு அணி அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2022, 12:28 am

ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியில் அறிமுகம் ஆகாமல் ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார்.

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் டி காக் 6 ரன்னில் வெளியேற, கேப்டன் கே எல் ராகுல் பொறுமையாக விளையாடினார். ஆனால் மறுமுனையில் வொகரா 19 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் தீபக் ஹூடா ராகுலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். ஆனால் 26 பந்துகளில் 45 ரன் எடுத்திருந்த தீபக் அவுட் ஆக, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.

ஆனால் கேப்டன் ராகுல் மட்டும் அணியை வெற்றி பெற வைக்க போராடிய போது 79 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி வரும் வெள்ளி ராஜஸ்தான அணியுடன் மோதுகிறது. அந்த போட்டியில் வெற்று பெறும் அணி வரும் 29ஆம் தேதி குஜராத் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடி தகுதி பெறும்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…