ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது.. சென்னை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிசிசிஐ!!
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் வெளியுடுவோம் என பிசிசிஐ தரப்பில் முதலில் கூறி இருந்தனர்.
பிசிசிஐ சொன்னது போல ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் முதலில் வெளியிட்டது. அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகள் மார்ச்-22 முதல், ஏப்ரல்-7 ம் தேதி வரை நடைபெறும் எனவும், இடைப்பட்ட நாட்களில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மீதம் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ, நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு அறிவிக்கும் என தெரிவித்திருந்தது.
தற்போது, ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் X தளத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ளது. மேலும், நடைபெற போகும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது போல அனைத்து போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெறுகிறது.
தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் கட்ட அட்டவணையில் ஏப்ரல்-8 ம் தேதி தொடங்கப்பட்டு, மே-26ம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல்-8 தேதி போட்டியாக சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணி போட்டியில் விளையாட உள்ளனர்.
குவாலிபயர்-1 மற்றும் எலிமினேட்டர் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் -2 மற்றும் இறுதி போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளது. தோனியின் மிகப்பெரிய ஆசை தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி போட்டியை (ஃபேர்வெல்) சென்னையில் விளையாட வேண்டும் என்பது தான்.
தோனிக்கு இது வரை ஒரு நல்ல ஃபேர்வெல் போட்டி அமையாத காரணத்தால், சிஎஸ்கே ரசிகர்கள் இந்த இறுதிபோட்டிக்கு சென்னை அணி வந்து கோப்பையை வென்று அந்த வெற்றியை ‘தல’ தோனிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதை சென்னை அணியின் புதிய கேப்டனான ருதுராஜ்ஜூம், சென்னை அணி வீரர்களும் செய்வார்களா என்று பொறுத்து இருந்து பாப்போம்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.