WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம்.
அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற ‘மணி இன் தி பேங்க்’ (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளார். 47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 இல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார்.
மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
This website uses cookies.