பாகிஸ்தானை கடைசி ஒவரின் கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது.
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர்.
ஆனால், ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன் எடுத்திருந்த ராகுல் 1.5 ஓவரில் நசிம் ஷா பந்து வீச்சில் அவுட் ஆனார். 4 ரன் எடுத்திருந்த ரோகித் சர்மா 3.2 ஓவரில் ஹரிஸ் ரவுல்ப் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அடுத்துவந்த சூர்யகுமார் 15 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.
பின்னர் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. 30 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் கோலி, பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால், பாகிஸ்தான் வீரர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா 19.1 ஓவரில் அவுட் ஆனார். அடுத்து தினேஷ் கார்த்திக் 19.5 ஓவரில் அவுட் ஆனார். இறுதியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் இருந்த அஸ்வின் 4 ரன் எடுத்தார்.
இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. கோலி 82 ரன்னுடன் களத்தில் இருந்து வெற்றிக்க்கு வித்திட்டார்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.