லேவர் கோப்பை தொடர் தான் என்னோட கடைசி போட்டி : எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரோஜர் பெடரரின் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2022, 10:06 pm
டென்னிஸ் உலகின் ஜாம்பவான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். 20 முறை கிராண்ட் ஸ்லாம், 8 விம்பிள்டன் ஆகிய பட்டங்களை வென்றுள்ள இவர். சர்வதேச டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார்.
பல மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த கிராண்ட் ஸ்லாம் தொடரான விம்பிள்டன் போட்டியிலும் காயம் காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை.
மீண்டும் இவர் எப்போது களத்துக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் திடீரென இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறும் லேவர் கோப்பை தொடர் தனது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.