குஜராத் அணியை அனுப்பி வைத்த மழை.. நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய 3வது அணி.!!
ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பான கட்டத்துக்கு எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கொல்கத்தா, ராஜஸ்தான் அணி கிட்டட்த்தட்ட உறுதி செய்துள்ளது.
அடுத்ததாக செல்லும் 2 அணிகள் எது என்பது ரசிகர்கள் மத்தியில் மிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியை குஜராத் அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.
இந்த நிலையில் அகமதாபாத்தில் பெய்த தொடர் மழை காரணமாக டாஸ் போடாமலேயே போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க இருந்தது. இருப்பினும் அப்போது மழை பெய்ய ஆரம்பித்ததால் போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மழை விரைவில் நின்று போட்டி நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழை அவ்வப்போது வலுவாக பெய்து இடையூறு செய்து கொண்டே இருந்தது.
அவ்வப்போது நடுவர்கள் ஆடுகளத்தை சோதனை இட்டு கொண்டிருந்தனர். இதற்கு இடையே இரவு 10.56 க்கு போட்டி தொடங்கும் என்றும், இந்த போட்டி 5 ஓவர்களை கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் 19 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், முதல் இரண்டு இடங்களுக்குள் தரவரிசையில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க: ஏமாந்தது போதும்.. இன்னும் எத்தனை காலம் தான் கையேந்தியே நிற்பது… உச்சகட்ட விரக்தியில் செல்வப்பெருந்தகை.!
மேலும் 13 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வியுடன் 11 புள்ளிகளை மட்டுமே பெற்ற குஜராத் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. தற்போது வரை பஞ்சாப், மும்பை மற்றும் குஜராத் அணிகள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.