புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? ஆஸ்திரேலிய பவுலர்களை அலற விட்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவானின் மகன்!!
Author: Udayachandran RadhaKrishnan2 December 2022, 6:30 pm
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் டிசம்பர் 1 அன்று தொடங்கியது . முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது . ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் மார்னஸ் லபூஷனே 204 ரன்கள் , ஸ்டீவன் ஸ்மித் 200 ரன்கள் (நாட் அவுட்) , டிராவிஸ் ஹெட் 99 ரன்கள் எடுத்தனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்தர்பால் மகன் , டேக்நரைன் சந்தர்பால் துவக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கினார் . தகப்பன் 8 எட்டடி பாஞ்சா குட்டி 16 அடி பாயும் என்பதை போல, தனது முதல் போட்டியிலே ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை விளாசி தள்ளினார் . முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த சந்தர்பால் , 51 ரன்கள் எடுத்த நிலையில் ஹசெல்வுட் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவர் விளையாடும் பாணி , அப்படியே இவரது தந்தையை பார்ப்பது போல உள்ளது . நீண்ட காலமாக ஒரு சிறப்பான துவக்க பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு , டெக் நரைன் சந்தர்பால் ஒரு சரியான வீரராக இருப்பர் என்று பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருது தெரிவித்து வருகின்றனர் .
A chip off the 'ol block! 💥
— cricket.com.au (@cricketcomau) December 1, 2022
Tagenarine Chanderpaul looking every bit a Test player already! #PlayOfTheDay #AUSvWI | @nrmainsurance pic.twitter.com/lcLmI5yD4M