உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்களை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்… குவியும் வாழ்த்துக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 6:16 pm

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்களை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்… குவியும் வாழ்த்துக்கள்!!

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்திய இளவேனில் வாலறிவன் 252.2 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒகேன் முல்லர் 251.9 புள்ளிகள் உடன் வெளி பதக்கத்தை பெற்றார். சீனாவின் ஜாங் ஜியாலேவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதேபோன்று ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் சிங் 628.2 புள்ளிகளை பெற்று 14 வது இடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இளவேனில் வாலறிவன் பெறும் 2-ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 697

    0

    0