ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சாம் கரன்… மீண்டும் சீனியர் வீரர்களையே குறிவைக்கும் சென்னை அணி!!

Author: Babu Lakshmanan
23 December 2022, 3:37 pm

16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி, மினி ஏலம் நடக்க இருப்பதால், 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களின் இடத்தை நிரப்பும் விதமாக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 132 வெளிநாட்டவர் என்று மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), சாம் கர்ரன் (இங்கிலாந்து), கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே) மற்றும் இந்தியாவின் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா போன்ற வீரர்களுக்கு கடும் கிராக்கியுடன் அதிக விலை போக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். காயத்தால் கடந்த சீசனில் விளையாடாத சாம் கர்ரனை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் 2021-ம் ஆண்டில் ரூ.16¼ கோடிக்கு விலை போய் ஆச்சரியப்படுத்தினார். அந்த தொகையை யாராவது மிஞ்சி சாதனை படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழக வீரர் ஜெகதீசன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜாசன் ராய், தென்ஆப்பிரிக்காவின் ரோசவ், வெஸ்ட் இண்டீசின் நிகோலஸ் பூரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் உள்ளிட்ட 19 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வில்லியம்சன் 2 கோடிக்கு குஜராத் அணியாலும், இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் ரூ.13.25 கோடிக்கும், மயாங்க் அகர்வால் ரூ.8.25 கோடிக்கும் ஐதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர். ரகானேவை ரூ.50 லட்சமான ஆரம்பவிலைக்கே சென்னை அணி எடுத்தது.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கரனை எடுக்க மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். கடந்த 2021ல் தென்னாப்ரிக்கா வீரர் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடாந்து, ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேம்ரூன் கிருனை ரூ.17.50 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu