அமெரிக்க ஓபன் டென்னிஸ்… மகுடம் சூடினார் இளம் வீரர் : கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 8:41 am

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், 7-வது இடத்தில் உள்ள நார்வே வீரர் கேஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இந்த போட்டியில் கார்லஸ் 6-4, 2-6, 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை இளம் வயது வீரர் வென்றது இதுவே முதன்முறை.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!