வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை விரட்டியடித்த விராட் : புதிய சாதனை படைத்த இந்திய அணி!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2023, 9:55 pm

வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை விரட்டியடித்த விராட் : புதிய சாதனை படைத்த இந்திய அணி!!!

உலகக் கோப்பையின் 17-வது போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பந்துவீச இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, வங்கதேசம் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அரைசதம் விளாசினார்கள்.

அதன்படி தன்சித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் நஜ்முல் 8 , மெஹிதி ஹசன் மிராஸ் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் இறங்கிய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லாஹ் சற்று நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். அதன்படி முஷ்பிகுர் ரஹீம் 38, மஹ்முதுல்லாஹ் 46 ரன்களை சேர்த்தனர்.

இறுதியாக வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 256 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது .இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். தொடக்க களமிறங்க இருவரும் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 48 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அதில் ஏழு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இவர்கள் இருவரின் கூட்டணியில் 88 ரன்கள் சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த சில நிமிடங்களில் சுப்மன் கில் 53 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த போட்டி போல சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 2 பவுண்டரி உட்பட 19 ரன் எடுத்து வந்த வேகத்தில் வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி தனது அனுபவத்தின் மூலமும், நிதானமான ஆட்டத்தின் மூலமும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 97 பந்தில் 103 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். அதில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியாக இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் விராட் கோலி 103* , கே எல் ராகுல் 34* ரன்னிலும் இருந்தனர். இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 577

    0

    1