விராட் கோலி திடீர் ஓய்வு அறிவிப்பு? பிசிசிஐக்கு கடிதம்.. இதுதான் காரணம்? ரசிகர்கள் கவலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 5:04 pm

வங்கதேச தொடரை வென்று அசத்திய இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகளும் ஜனவரி 3, 5 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய தேர்வுக்குழு வராததால் சேட்டன் சர்மா தலைமையிலான பழைய தேர்வுக்குழுவை அறிவிக்கவுள்ளனர்.

அதன்படி ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் விளையாடுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி எடுத்துள்ள முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இனி டி20 கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும், 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக கூறியிருக்கிறார். இதனால் இலங்கை டி20 தொடரில் கோலி நிச்சயம் ஆடப்போவதில்லை என தெரியவந்துள்ளது.

34 வயதாகும் விராட் கோலி டி20 உலகக்கோப்பைக்கு பின், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் மற்ற வடிவ கிரிக்கெட்களில் மட்டுமே ஆட வைக்க உள்ளதாகவும் பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் வெளியானது.

ஆனால் அவர் தற்போது தற்காலிகமாக தான் ஓய்வு கேட்டுள்ளார். முக்கியமான போட்டிகளின் போது அணிக்கு திரும்புவார்.

விராட் கோலியோடு சேர்த்து ரோகித் சர்மாவுக்கும் இதே நிலைமை தான் உள்ளது. 36 வயதாகும் அவர் முழு ஓய்வையே அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் ஜனவரியில் வரவுள்ள இலங்கை தொடரின் முதலே ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என தகவல்கள் கசிந்துள்ளன.

  • Mohanlal Empuraan Controversy பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!