சாம் கரனால் சரிந்து விழுந்த டூபிளசிஸ்… திடீரென அடிக்க கை ஓங்கிய கோலி ; மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan20 April 2023, 6:46 pm
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்களூரூ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக சாம் கரனும், பெங்களூரூ அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் செயல்பட்டுள்ளனர். டூபிளசிஸ் காயம் காரணமாக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு விராட் கோலி – டூபிளசிஸ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்க விட்டு ரன்களை குவித்து வந்தனர்.
இந்த சூழலில் போட்டியின் 16வது ஓவரை பஞ்சாப் கேப்டன் சாம் கரன் வீசினார். அப்போது, அந்த ஓவரின் முதல் பந்தை டூபிளசிஸின் முகத்தை நோக்கி எறிந்தார். இதனால், வேகமாக வந்த பந்திடம் இருந்து தப்பிக்க முயன்ற டூபிளசிஸ் நிலைகுலைந்து கிழே விழுந்தார்.
பிறகு, நோ பால் வீசியதற்கு சாம் கரன், டூபிளசிஸிடம் மன்னிப்பு கோரினார். இருவரும் கைகுலுக்கி சமரசம் பேசிக் கொண்டனர். அப்போது, அங்கு வந்த விராட் கோலி, சாம் கரனை விளையாட்டாக அடிக்க கை ஓங்கினார்.
கிரிகக்கெட் வீரர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையை பார்த்து மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ந்து போகினர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.