பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என்று இப்போது புரிகிறது.. ஆதிபுருஷ் படம் குறித்து ஷேவாக் மோசமான விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2023, 3:43 pm
பிரபாஸ், சைஃப் அலிகான் மற்றும் க்ரித்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் படம் வெளியாகி ஒரு வாரமாகிறது. இந்த படம் பல நெட்டிசன்களின் மீம் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது என்றே கூறலாம். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மொக்கையாக இருப்பதாக பலர் கேலி செய்து வருகிறார்கள்.
படம் பார்த்த பலரும் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் சில பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூட படத்தைப் பார்த்து கிண்டல் செய்து, பிரபாஸின் கடைசி பிளாக்பஸ்டர் பாகுபலி தொடர்பான நகைச்சுவையுடன் ஆதிபுருஷைப் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு சேவாக் தனது ட்விட்டரில், “ஆதிபுருஷரைப் பார்த்ததும் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று தெரிய வந்தது” என்று கேலி செய்தார். இவருடைய இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.