ஹெட்மெயர் சரவெடி.. மளமளவென வெஸ்ட் இண்டீஸ் ரன் குவிப்பு ; தொடரை தக்க வைக்குமா இளம் இந்திய அணி..?
Author: Babu Lakshmanan12 August 2023, 10:00 pm
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தி அணி 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும் என்ற சூழலில் இளம் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பவல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், ஹிட்மெயர் (61) மற்றும் ஹோப் (45) ஆகியோர் அணியின் ரன் குவிப்பிற்கு கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்களை குவித்துள்ளது.
இந்திய சார்பில் அர்தீப் சிங் மூன்று விக்கெட்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.