ஓய்வை அறிவித்ததும் வினேஷ் போகத்துக்கு அடிச்சது ஜாக்பாட்.. ராஜ்யசபா எம்பி ஆக்க திட்டம்?

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 3:55 pm

பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இதற்கிடையே, வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.

இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இன்றும் வினேஷ் போகத் விவகாரம் எதிரொலித்தது.

வினேஷ் போகத் தகுத நீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின.

இந்தப் பிரச்சனையை எழுப்ப அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இன்று அரியானாவில் ஒரு ராஜ்யசபா இருக்கை காலியாக உள்ளது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்தால் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்துள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 971

    0

    0