டி20 உலகக்கோப்பை சிறந்த அணி எது? சிறந்த வீரர்கள் யார்? பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. இந்தியாவோட நிலை என்ன தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 1:21 pm
Icc - Updatenews360
Quick Share

உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஐசிசி Most Valuable Team என்ற பெஸ்ட் 11 என்ற அணியை தேர்வு செய்துள்ளது.

இதில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி யின் இந்த சிறந்த அணியின் கேப்டனாக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி யின் இந்த பெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹெல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நடப்பு டி20 உலக கோப்பையில் 212 ரன்கள் அடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர் மற்றொரு தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும். அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நடந்து முடிந்த தொடரில் 225 ரன்கள் அடித்திருக்கிறார்.

மூன்றாவது வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சேர்க்கப்பட்டிருக்கிறார். விராட் கோலி இந்த தொடரில் அதிகபட்சமாக 296 ரன்கள் அடித்திருக்கிறார். நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நடந்து முடிந்த தொடரில் அவர் 239 ரன்கள் விளாசி இருக்கிறார்.

ஐந்தாவது வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கிளன் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் 201 ரன்கள் அடித்திருக்கிறார். நடு வரிசையில் ஆறாவது வீரராக சிக்கந்தர் ராசாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வே சேர்ந்த அவர் நடந்து முடிந்த தொடரில் 219 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

ஏழாவது வீரராக பாகிஸ்தானை சேர்ந்த சதாப்கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பேட்டிங்கில் 98 ரன்களும், பந்துவீச்சில் 11 ரன்களும் அடித்திருக்கிறார். ஆல் ரவுண்டராக சாம் கரன் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் நடப்பு தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஒன்பதாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் நோக்கியா சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 10வது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தின் மார்க் வுட், இந்த தொடரில் 9 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

11 ஆவது வீரராக ஷாகின் ஷா ஆப்ரிடி சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் 11 விக்கெட் வீழ்த்திருக்கிறார். இந்த அணியின் 12 ஆவது வீரராக இந்தியாவின் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பேட்டிங்கில் 128 ரன்களும் பந்து வீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 449

    0

    0