ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, சென்னை அணியில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே ஜோடி அணிக்கு நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் ருதுராஜ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்த நிலையில், 60 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால், கான்வே பொறுப்பாக விளையாட, அதன்பின் களமிறங்கிய சிவம் துபே, ரஹானே பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். பொறுப்பாக விளையாடிய கான்வே (40 ரன்கள்) தனது விக்கெட்டை இழக்க, அம்பதி ராயுடு 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி(1 ரன்) ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார்.
இறுதிவரை களத்தில் நின்ற ஜடேஜாவும் ஆட்டமிழக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களும், கான்வே 40 ரன்களும், ஜடேஜா 22 ரன்களும் குவித்தனர். குஜராத் அணியில் மோஹித் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து குஜராத் வீரர்கள் களமிறங்கினர், முதல் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டும் குஜராத் அணி எடுத்த நிலையில், 3வது ஓவரின் போது தீபக் பந்தில் சாஹா அவுட் ஆனார்.
5 ஓவரில் 39 ரன்னில் ஒரு விக்கெட் இழந்து ஆடி வந்த குஜராத் அணி, 6 வது ஓவரின் போது தீக்ஷானா ஓவரின் போது கேப்டன் ஹர்திக் 8 ரன்னில் அவுட் ஆனார்.
விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் கில் அதிரடியாக ஆடி வருகிறார். அவருடன் ஜோடி போட்டுள்ளார் ஷானாகா. 6 ஓவர் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.