குஜராத் அணி துணிந்து பவுலிங் எடுத்தது ஏன்..? நம்ப முடியாத ரகசியம் ; சென்னை வீழ்ந்ததற்கான காரணம் இதுதான்..!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 8:23 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டம், பாட்டம் என களைநிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் விளையாடின. அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்கள், கான்வே (1), மொயின் அலி (23), ஸ்டோக்ஸ் (7), ராயுடு (12) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கெயிக்வாட் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அவர் 9 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். இறுதியில் துபே (18), தோனி (14) ஓரளவுக்கு கைகொடுக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு சாஹா, கில் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சாஹா 25 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், வில்லியம்சனுக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக சாய் சுதர்சன் களமிறங்கினார். சாய் சுதர்சன் (22), ஹர்திக் பாண்டியா (8) என ஏமாற்றம் அளித்தாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய கில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட போது, திவேதியா சிக்சர் மற்றும் பவுண்டரியை பறக்க விட்டு, குஜராத் அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான குஜராத் அணி, 2023 ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதுவரை 10 போட்டிகளை சேஸிங் விளையாடிய குஜராத் அணி 9ல் வெற்றி பெற்றுள்ளது. அதில் 8 ஆட்டங்களில் கடைசி ஓவரில் வெற்றியை ருசித்துள்ளது.

சேஸிங்கில் குஜராத் அணி வலிமையாக இருப்பதனால் தான் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!