டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிதாஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் டிம் டேவிட் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக ரிச்சர்சன் அணியில் இடம் பிடித்தார். கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
முதலில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னர் – கீரின் பேட்டிங் செய்தனர். கீரின் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மிட்செல் மார்ஸ் – டேவிட் வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 50 எடுத்த போது வார்னர் 25 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஸ்மித் (4 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மார்ஸ் 45 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 25 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த கேப்டன் வேட் 6 ரன்னிலும் போல்ட் ஆனார்.
கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட்டிங் செய்து வரும் ஆப்கான் அணி, துவக்க வீரர் குர்பாஷ் 17 பந்துகளில் 30 ரன்களை விளாசி அவுட் ஆக, கானி வெறும் 2 ரன்னில் அவுட் ஆனார். தற்போது ஜாட்ரான் மற்றும் குல்பைதின் நயிப் பொறுமையாக விளையாடி வருகின்றனர்.
தற்போது ஆப்கான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்துள்ளது. 7 ஓவருக்கு 71 ரன் தேவையென்ற நிலையில் ஆப்கான் சீரான ஆட்டத்தை ஆடி வருகிறது.
இதையடுத்து நயிபை மேக்ஸ்வெல் ரன் அவுட எடுக்க, அடுத்து ஜட்ரான் 26 ரன்னில் பெவிலியன் திரும்பினார். நஜிபுல்ல ஜட்ரானும் டக் அவுட ஆக தற்போது ரசூலி ஆடி வருகிறார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.