அசத்திய கில்… சிக்ஸர் மழை பொழிந்த மில்லர், அபினவ் : ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரோகித்… குஜராத்தை வீழ்த்துமா மும்பை?!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2023, 10:00 pm

குஜராத்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 35வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து, முதலில் குஜராத் அணி விளையாடியது. ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்தது குஜராத்.

ஓபனரும் விக்கெட் கீப்பருமான ரித்திமான் சாஹா 4 ரன்களில் அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரில் நடைடையக் கட்டினார்.

ஷுப்மன் கில் மட்டும் நிதானமாக விளையாடிய அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 ரன்களிலும், விஜய் சங்கர் 19 ரன்களிலும் ஏமாற்றினர். டேவிட் மில்லர், அபினவ் மனோகர் நின்று விளையாடினர். அபினவ் அசத்தலாக சிக்ஸர்களை விளாசத் தொடங்கினார். ஆனால் அவரும் 42 ரன்களில் கேட்ச் ஆனார். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளையும் குமார் கார்த்திகேயா 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 207 ரன்களை எடுத்தது. 120 பந்துகளில் 208 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் முதலே குஜராத் வீரர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசினர். முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே மும்பை எடுத்தது. இரண்டாவது ஓவரை கேப்டன் ஹர்திக் வீச, ரோகித் ஷர்மா அவர் கையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து இஷான் மற்றும் க்ரீன் ஆகியோர் சீரான ரன்களை எடுத்து வருகின்றனர். 5 ஓவர் முவில் ஒரு விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 409

    0

    0