சாதனை படைக்குமா இந்திய அணி? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ஆஸி., கொடுத்த இமாலய இலக்கு…!!!
Author: Udayachandran RadhaKrishnan10 June 2023, 7:27 pm
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை டிக்ளெர் செய்துள்ளது.
கடைசியாக, கம்மின்ஸ் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா டிக்ளெர் செய்துள்ளது. இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 443 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் கில் களமிறங்கியுள்ளனர். நாளை ஒருநாள் மிச்சமிருக்கும் நிலையில் இமாலய இலக்கை இந்திய அணி அடைந்து வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.