ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி? மேற்கு இந்திய தீவுகளுடன் இன்று கடைசி டி20 போட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2022, 9:12 am

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையே டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. அதன்படி,2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்து இருந்தது.

India vs West Indies 1st T20 Live Streaming: When and where to watch IND vs  WI T20I match on TV and online | Cricket - Hindustan Times

இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அருகில் வந்து இந்திய அணியிடம் தோல்வி அடைந்து தொடரிலும் பின்தங்கிவிட்டது.

Ind vs WI Highlights 2018: India crush West Indies by 9 wickets, win series  3-1 | Cricket News - Times of India

இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

India vs West Indies: A brief history of India vs WI in ODIs | Cricket News  - Times of India

முதல் இரண்டு போட்டிகளையும் வென்ற இந்திய அணி இன்று நடைபெறவுள்ள கடைசி போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற தீவிரமாக உள்ளது. ஆனால்,இப்போட்டியில் விராட் கோலி, ரிசப் பந்த் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2298

    0

    0