20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் இந்தியா… அசத்தும் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா ; பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
21 August 2023, 9:53 pm

உலகக்கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஜுலை 30ம் தேதி தொடங்கிய இந்த செஸ் தொடர் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் அரையிறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் நேற்று முன்தினம் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால், இன்று டை பிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது. இதில், பேபியானோ கருவானாவை தோற்கடித்து இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். ரேபிட் முறையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு அவர் முன்னேறி உள்ளார்.

இதன்மூலம், 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் உலக செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பைனலில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா விளையாடுவார்.

  • Rashmika Mandanna injured at gym பெரும் சோகத்தில் மூழ்கிய ராஷ்மிகா மந்தனா…சிக்கந்தர் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு..!