டாஸ் வென்று பேட்டிங்…. இந்திய அணிக்கு இவ்வளவு ராசியா..? ரோகித் ஷர்மா எடுத்த சரியான முடிவு ; குஷியில் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 2:20 pm

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. மும்பையில் இன்று நடந்து வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

2019ல் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. மேலும், உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியதே கிடையாது. எனவே, நடப்பு உலகக்கோப்பை தொடரில் 9 ஆட்டங்களில் 9ல் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த முறையில் நியூசிலாந்து அணியை தோற்கடிக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இது இந்திய அணியின் ராசியாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில், இதுவரை நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி முதலில் பேட் செய்த போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 2011ல் நடந்த அரையிறுதியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. அந்த ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்றது. 2015 மற்றும் 2019ல் 2வதாக பேட் செய்த இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த சூழலில் இந்த முறை முதலில் இந்திய அணி பேட்டிங் செய்வதால், கட்டாயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…