மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பாகிஸ்தான்… 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ; தொடரில் இருந்து வெளியேறிய வங்கதேசம்..!!

Author: Babu Lakshmanan
31 October 2023, 9:26 pm

வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி, இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடியது. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும், மகமுதுல்லா (56), லிட்டன் தாஸ் (45), ஷகிப் அல் ஹசன் (43) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 45.1 ஓவர்களில் 204 ரன்களை எட்டியது.

பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம் தலா விக்கெட்டும், ஹரீஷ் ராஃப் 2 விக்கெட்டும், இப்திகார் அகமது, உஸாமா மிர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டை ஷாகின் அப்ரிடி கைப்பற்றிய போது, அதிவேகமாக (51 போட்டிகள்) 100 விக்கெட்டுக்களை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (52) சாதனையை முறியடித்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 32.3 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஃபக்கர் ஜமான் (81), ஷபிக் (68), ரிஸ்வான் (28 நாட் அவுட்) சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியதுடன், அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

அதேவேளையில் வங்கதேச அணி 6வது தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…