பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் – தென்னாப்ரிக்கா அணிகள் மோதின. சென்னையில் நடைபெறும் இந்த சீசனின் கடைசி ஆட்டம் இதுவாகும். எனவே, மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் அலைமாதியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்தாலும், நிதானமாக ஆடிய பாபர் ஆசம் (50) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இளம் வீரர் சவுத் ஷகீல் (52), சதாப் கான் (43) ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர், இருப்பினும் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால், 46.4 ஓவர்களில் 270 ரன்னுக்கு ஆல்அவுட்டானது.
தென்னாப்ரிக்கா தரப்பில் ஷாம்ஸி 4 விக்கெட்டுக்களும், யான்சென் 3 விக்கெட்டும், கோயிட்ஷி 2 விக்கெட்டும், இங்கிடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, பேட் செய்த தென்னாப்ரிக்கா அணிக்கு டிகாக் (24), பவுமா )28), டுசன் (21), மில்லர் (29) என சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தனர். மறுபுறம் மார்க்ரம் ரன்களை குவித்தார். சதமடித்து அணியை வெற்றி பெறச் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் 9 விக்கெட்டுக்களை தென்னாப்ரிக்க இழந்த நிலையில், வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பொறுமையாக ஆடியா மகாராஜ் மற்றும் ஷம்ஷி இருவரும் அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தனர்.
இதன்மூலம் 5 வெற்றியைப் பெற்ற தென்னாப்ரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 6 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 4 தோல்விகளுடன் அரையிறுதி வாய்ப்பு மங்கியது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.