பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாதித்து காட்டிய இளம் வீராங்கனை : இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையாக அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2022, 8:37 pm

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக கர்மான் கவுர் தண்டி உருவெடுத்துள்ளார்.

டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக கர்மான் கவுர் தண்டி (24 வயது) உருவெடுத்துள்ளார். சமீபத்தில் கனடாவின் சாகுனேயில் நடந்த டபிள்யு 60 ஐ.டி.எப் தொடரில் பட்டம் வென்றதன் மூலம் கர்மான் கவுர் இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.

கனடா வீராங்கனை கேத்ரீன் செபோவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கர்மான் கவுர் பட்டத்தை வென்றார்.
இதை தொடர்ந்து அவர் 91 இடங்கள் முன்னேறி உலகின் 217-ம் நிலை வீராங்கனையாக மாறியுள்ளார். இதன் மூலம் அவர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையாக இருந்த அங்கீதா ரெய்னாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ஒலிம்பிக் வீராங்கனை அங்கீதா உலக தரவரிசையில் 13 இடங்கள் சரிந்து 297வது இடத்தில் உள்ளார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!