ரசிகர்களை அலறவிட்டதா ‘டிராகன்’…படத்தின் விமர்சனம் இதோ.!

Author: Selvan
21 February 2025, 4:34 pm

டிராகன் திரைவிமர்சனம்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்,அனுபமா,மிஸ்கின்,VJ சித்து,கயத் லோஹர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் இன்று (பெப்ரவரி 21) ரிலீஸ் ஆகியுள்ளது.

இதையும் படியுங்க: ஹாட்ரிக் வெற்றியை ருசித்தாரா தனுஷ்…’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் விமர்சனம்.!

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்மரமாக இறங்கி செயல்பட்டது,இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அவருடைய கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார்,இவர் ஏற்கனவே “ஓ மை கடவுளே” என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர்,தற்போது இவர் இயக்கிய டிராகன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா,படத்தில் தன்னுடைய வித்தையை எப்படி காட்டியுள்ளார் என்பதை பார்ப்போம்.

Pradeep Ranganathan dragan movie review

படத்தின் மையப்புள்ளி

ராகவன் என்ற கல்லூரி மாணவனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் பள்ளி படிக்கும் வரை நன்றாக படித்து உள்ளார்,அப்போது ஒரு பெண்ணை காதலிக்கிறார்,ஆனால் அவரோ பிரதீப்பின் காதலை ஏற்க மறுத்து உள்ளார்,காரணம் அவருக்கு கெட்ட பையனாக இருந்தால் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார்,இதனால் கல்லூரி சேர்ந்த பிறகு சினிமாவில் காலம் காலமாக காட்டக்கூடிய கெத்து மாணவனாக வலம் வருகிறார்,கல்லூரியில் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து லூட்டி அடித்து 48 அரியரை போட்டுள்ளார்,அப்போது கல்லூரியில் காதலியாக வரும் அனுபமா உன்னைப்போல் தண்டமாக இருக்கும் ஒரு பையன் என் வாழ்க்கையில் வேண்டாம் என பிரேக்கப் செய்கிறார்,இதனால் மனம் உடைந்த பிரதீப் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பல தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் செய்து,ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்,அவருடைய வாழ்க்கையும் பயங்கர ஆடம்பர வாழ்க்கையாக மாறி கயத் லோஹருடன் திருமணம் நிச்சயம் ஆகிறது,இப்படி நன்றாக சென்ற நேரத்தில்,திடீரென அவருடைய கல்லூரி முதல்வரான மிஸ்கின் நீ போலி சான்றிதழ் மூலம் தான வேலைக்கு சேர்ந்து இருக்க,இரு உன் கம்பெனில சொல்லி கொடுக்கிறேன் என மிரட்டுகிறார்,அதற்கு பிரதீப் ரங்கநாதன் பதிலுக்கு என்ன செய்தார்,அவருக்கு திருமணம் முடிந்ததா,இல்லை அனுபமாவை சந்தித்து சேர்ந்தாரா,அரியரை எப்படி கிளியர் செய்தார் என்பதே படத்தின் கதையாக நகர்கிறது.

படத்தின் வலு

படத்தின் கதைக்கு ஏற்ப பக்கா கல்லூரி பையனாக பிரதீப் ரங்கநாதன் நடித்து அசத்தியுள்ளார்.அதே போல் படத்தின் ஹீரோயின் அனுபமா படத்திற்கு வலு சேர்த்துள்ளார்,மேலும் மிஸ்கின்,கே எஸ் ரவிக்குமார்,கெளதம் மேனன் போன்ற நட்சத்திரங்கள் தங்களுடைய அனுபவ நடிப்பை கச்சிதமாக கதைக்கு ஏற்ப நடித்துள்ளனர்,படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக வரும் VJ சித்துவின் காமெடி இளைஞர்களை வெகுவாக கவர்கிறது.வழக்கமான கல்லூரி கதை என்றாலும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நேர்த்தியாக போரிங் இல்லாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்.பாடல்களும் படத்தின் கதைக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தியுள்ளது.

படத்தின் மைனஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சோ மெதுவாக செல்கிறது,அதுமட்டுமில்லாமல் படத்தில் வரக்கூடிய சில கெட்ட வார்த்தைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.அரியர் வைத்துள்ள மாணவனை படத்தில் கெத்தாக காட்டியது,இன்றைய தலைமுறை இளைஞர்களை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளது என சில சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில் டிராகன் திரைப்படம் பக்கா கமர்ஷியல் படமாக அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!