ரசிகர்களிடம் பத்திக்கிச்சா ‘ஃபயர்’…படத்தின் விமர்சனம் எப்படி.!
Author: Selvan15 February 2025, 6:23 pm
ஃபயர் படத்தின் திரைவிமர்சனம்
நாகர்கோவிலில் டாக்டரான காசி என்ற நபர்,பல பெண்களை ஏமாற்றி,சீரழித்து சிறையில் தற்போது இருந்து வருகிறார்.இந்த கதையை மையமாக வைத்தே ஃபயர் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜேஎஸ்கே சதீஸ்குமார்.
இதையும் படியுங்க: காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!
படத்தின் கரு
பிசியோதெரபி மருத்துவராக நடித்திருக்கும் பாலாஜியையே காணவில்லை என அவரது பெற்றோர்கள் போலீஸில் புகார் அளிக்கின்றனர்,உடனே போலீஸ் அவரை தீவிரமாக தேடுகிறது,அப்போது தான் ரஷிதா,சாந்தினி தமிழரசன்,சாக்ஷி அகர்வால்,காயத்திரி ஷான் ஆகியோருடன் பாலாஜி உல்லாசமாக இருந்து விட்டு,அவர்களிடம் மிரட்டி பணம் வசூலித்துள்ளதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இவர்கள் மட்டுமில்லாமல்,மேலும் பல பெண்களை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்து சீரழித்துள்ளதால்,பாலாஜி முருகதாஸை உடனடியாக பிடிக்கும் படி அமைச்சரான சிங்கம் புலி,இன்ஸ்பெக்டர் ஜேஎஸ்கே-க்கு அழுத்தம் கொடுக்கிறார்,அதன் பிறகு போலீசார் பாலாஜியை எப்படி பிடித்தார்கள்,அவனுக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதி கதையாக பயணிக்கிறது.
படத்தின் பிளஸ்
ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதால்,படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள பாலாஜி தன்னுடைய வசீகர தோற்றத்தால்,அவருக்கு கொடுக்கப்பட்ட ரோலில் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார்.பாதிக்கப்பட்ட பெண்களாக நடித்துள்ள நடிகைகளும் கவர்ச்சி காட்டி படத்தை மும்மரமாக கொண்டு சேர்த்துள்ளனர்.
மேலும் அமைச்சராக நடித்துள்ள சிங்கம் புலி, எஸ்ஐ ஆக நடித்துள்ள சுரேஷ் சக்கரவர்த்தி தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர் .
படத்தில் இயக்குனர் தான் சொல்ல வேண்டிய கருத்தை சமூக அக்கறையோடு மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். டி கே இசையில் உருவாகியுள்ள பாடல்களும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.
படத்தின் மைனஸ்
படத்தில் பெண்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை கொடுத்திருந்தாலும்,அங்கே அங்கே வரக்கூடிய எல்லை மீறிய கவர்ச்சி ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது.மேலும் இன்ஸ்டபெக்டராக நடித்துள்ள ஜே எஸ் கே போலிஸுக்கு உண்டான தோற்றத்தில் அவ்வளவு எடுப்பாக இல்லை என ரசிகர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் ஃபயர் படம் வர கூடிய நாட்களில் தீயாய் வசூலை அள்ளும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.