ரவி மோகன் ரசிகர்களை இழுத்தாரா…”காதலிக்க நேரமில்லை”படத்தின் திரைவிமர்சனம்..!

Author: Selvan
15 January 2025, 7:07 pm

நவீன காதலை இப்படியும் பண்ணலாமா

ரவி மோகன்,நித்யாமேனன் நடிப்பில் உருவாகி பொங்கல் அன்று திரைக்கு வந்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை.இப்போ இருக்கக்கூடிய ஒரு நவீன காதலை மையப்படுத்தி இயக்குனர் கிருத்திகா உதயநிதி கச்சிதமாக எடுத்துள்ளார்.

Nithya Menen Ravi Mohan Tamil Movie

ஒரு கட்டிடக்கலை நிபுணராக நடித்திருக்கும் நித்யாமேனன் ஜான் கொக்கனை 4 வருடமாக காதலித்து வருகிறார்.இருவரும் வெளிநாடு செல்வதற்காக அப்போதைக்கு ஒரு பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஆனால் ஜான் கொக்கைன் வேறு ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருப்பதை பார்த்த நித்யாமேனன்,அவரிடம் இருந்து விலகி தனியாக பெங்களூரு செல்கிறார்.

காதலின் ஏமாற்றம், தைரியமான முடிவுகள், நேர்மையான கோபம் என வாழ்வை இயல்பான கண்ணோட்டத்தோடு அணுகுகிற நவீனக் காலத்துப் பெண்ணாக நித்யா மேனன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ஆனால் நித்தியாமேனனுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை உள்ளதால் ஸ்பெர்ம் டோனர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்.

இதையும் படியுங்க: கல்லா கட்டிய நெட்ஃபிளிக்ஸ்…பல மாஸ் படங்களின் OTT உரிமைகளை வாங்கி அசத்தல்…!

எட்டு வருடங்களுக்கு பிறகு ஏற்கனவே பெங்களூரில் சந்தித்த ரவி மோகன் நித்யாமேனன் தங்கியிருக்கும் பக்கத்து வீட்டில் குடி வருகிறார்.நித்யா மேனன் 10 வயது பையனிடம் ரவி மோகன் நல்ல நட்பாக பேசி வருகிறார்.இதனால் நித்யா மேனனுக்கு ரவி மோகன் மீது ஒரு வித ஈர்ப்பு வருகிறது.இதில் சுவாரஸ்யமே நித்யா மேனனுக்கு ஸ்பெர்ம் டோனட் செய்த நபர் ரவி மோகன் தான்,ஆனால் இந்த விஷயம் யாருக்குமே தெரியாது.

அதன் பின்பு நித்யா மேனன் மற்றும் ரவி மோகன் இடையே காதல் மலர்ந்ததா,அவர்களுடைய அடுத்தகட்ட வாழ்க்கை படத்தில் எப்படி பயணித்தது என்பதே படத்தின் மீதி கதை.

இப்படியும் காதல் செய்யலாமா என்று ரொம்ப அழகா நேர்த்தியாக கதையை கொண்டு செல்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி மோகனுக்கு,இப்படம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என தெரிகிறது.ரவி மோகனின் நண்பர்களாக படத்தில் வினய் மற்றும் யோகி பாபு வருகிறர்கள்.நடிகர் வினய் படத்தில் பலரும் நடிக்க தயங்கும் ஓரின ஈர்ப்பாளராக நடித்து அசத்தி இருக்கிறார்.

ஒரு பெண்,ஆண் துணையில்லாமல் தைரியமாக இந்த உலகத்தில் வாழ முடியும் என அற்புதமாக காதலிக்க நேரமில்லை காட்டியுள்ளது.படத்தில் வரக்கூடிய ஏ ஆர் ரகுமான் பாடல்கள்,படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.ஒரு சில இடங்களில் தன்பாலின ஈர்ப்பு குறித்த கேலிகள் இருந்தாலும்,உறவுகளுக்கு இடையேயான அன்பை கதையின் போக்கிலேயே வெளிப்படையாக காட்டும் காதலிக்க நேரமில்லை,இப்போ இருக்கக்கூடிய இளையர்களுக்கு ஒரு நல்ல சோசியல் கருத்தை கொடுக்கும் என பேசப்படுகிறது

  • TOP 10 Tamil Serials TRP சன் டிவியை மிஞ்சும் விஜய் டிவி.. இந்த வாரம் முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?