எதிர்பார்ப்பை எகிற வைத்ததா மோகன்லாலின் ‘எம்புரான்’…படத்தின் விமர்சனம் இதோ.!

Author: Selvan
27 March 2025, 4:09 pm

மோகன்லால் நடிப்பில்,பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான “எம்புரான்” பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகியுள்ளது.2019ல் வெளியான “லூசிஃபர்” படத்தின் தொடர்ச்சியாக உருவான இப்படம், மலையாள சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்க: ஐபிஎல் கிரிக்கெட்டே கிடையாது..தடை பண்ணுங்க..குஜராத் அணி பவுலர் ஆவேசம்.!

இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையரங்குகளில் தொடங்கிய நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த படி,மிக பிரம்மாண்டமான திரைப்படமாக எம்புரான் அமைந்துள்ளது.

கதைக்கரு

லூசிஃபரில் தொடங்கிய அரசியல் மற்றும் சக்திக்கான போராட்டம் எம்புரானிலும் தொடர்கிறது.பிமல் நாயர் இல்லாத நிலையில்,ஜெட்டின் ராம் தாஸ் தனது முதல்வர் பதவியை ஐந்து ஆண்டுகளாக நிரப்பி வருகிறார்.ஆனால், தனது தந்தையின் பாதையில் இருந்து மாற விரும்பும் ஜெட்டின்,அரசியலில் புதிய மாற்றங்களை செய்ய நினைக்கிறான்.இதற்கு அவனது சகோதரி பிரியதர்ஷினி கூட ஒத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில்,அனைவரும் ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) திரும்ப வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் அவர் தற்போது “அப்ராம் குரேஷி” என்ற நிழல் உலகத்தின் பேரதிபராக,உலக அளவில் பல அபாயகரமான செயல்களில் ஈடுபடுகிறார். அவரது உண்மையான நோக்கம் என்ன?அரசியலில் அவர் திரும்ப வருவாரா? என்பதையே எம்புரான் விரிவாக வெளிப்படுத்துகிறது.

முரளி கோபி எழுதிய திரைக்கதைக்கு,பிருத்விராஜ் தனது அசாத்திய இயக்கத்தால் புதிய உயிர் கொடுத்துள்ளார்.மோகன்லாலின் முதல் காட்சியே ரசிகர்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

முதல் பாதி கதாபாத்திரங்களை நுட்பமாக விளக்குகிறது,அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.இரண்டாம் பாதி ஆக்‌ஷன்,அரசியல் மற்றும் சக்திக்கான போராட்டத்தை ஆழமாக கொண்டு செல்கிறது.

சிறப்பம்சங்கள்

மோகன்லாலின் தனித்துவமான ஸ்டைல்,அணுகுமுறை,அசால்ட் நடிப்பு ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.மஞ்சு வாரியர் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்.படத்தில் வரக்கூடிய மாஸ் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது

சுஜித் வாசுதேவனின் ஒளிப்பதிவு மற்றும் தீபக் தேவின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.மொத்தத்தில் எம்புரான் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்
  • Leave a Reply