ஹாட்ரிக் வெற்றியை ருசித்தாரா தனுஷ்…’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் விமர்சனம்.!

Author: Selvan
21 February 2025, 2:25 pm

ரசிகர்களுக்கு கோபமா இல்லை மகிழ்ச்சியா

தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல வித்தைகளை கையில் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு,ஆனால் தனுஷ் சமீபகாலமாக இந்த 3 துறைகளிலும் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் இயக்கி தயாரித்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது,தனுஷ் முதன்முதலில் பா.பாண்டி படத்தை இயக்கினார்,அதன் பிறகு அவருடைய 50 வது படமான ராயன் படத்தை இயக்கி வெற்றிபெற்றார்.தற்போது தன்னுடைய 3வது படமான NEEK திரைப்படத்தை இயக்கி வெற்றி அடைந்தாரா என்பதை பார்ப்போம்

NEEK movie review

இந்த படத்தில் பவிஷு,பிரியா வாரியர்,அனிகா,மேத்யூ தாமஸ் என பல இளைஞர் பட்டாளங்கள் நடித்துள்ளனர்,மேலும் சரத்குமார்,சரண்யா பொன்வண்ணன்,ஆடுகளம் நரேன், உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இதையும் படியுங்க: அடக்கடவுளே..!சிம்பு பட நடிகையா இவுங்க..வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!

படத்தின் கரு

ஹீரோவாக அறிமுகமாகியுள்ள தனுஷின் அக்கா மகன் பவிஷு காதல் தோல்வியில் இருக்கிறார்,சமையல் கலைஞரான அவருக்கு அவருடைய பெற்றோராக நடித்துள்ள நரேன்-சரண்யா இருவரும் பெண் பார்க்கும் போது பிரியா வாரியர் அறிமுகம் ஆகிறார்,பிரியா வாரியாரை தன்னுடைய பள்ளி தோழி என்று அறிந்த பிறகு இருவரும் தங்களை புரிந்து கொள்ள கால அவகாசம் கேட்கின்றனர்,இதற்கிடையில் பவிஷின் முன்னாள் காதலியான அனிகாவிடம் இருந்து திருமண அழைப்பிதழ் வருகிறது,பவிஷின் முன்னாள் காதல் கதையை கேட்ட பிரியா வாரியார் கல்யாணத்திற்கு சென்று வா என்று கூறுகிறார்,திருமணத்திற்கு செல்லும் வழியில் பவிசுக்கு என்ன நடந்தது,அவர் யாரை கடைசியில் திருமணம் செய்தார்,அனிகாவை பிரிந்ததற்கு காரணம் என்ன போன்றவற்றை மையமாக வைத்து படம் நகர்கிறது.

படத்தின் ப்ளஸ்

வழக்கமான காதல் கதையை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருந்தாலும் இப்போ இருக்கக்கூடிய ட்ரெண்டுக்கு ஏற்ப தனுஷ் எடுத்த விதம் அருமை,முதல் பாதி முழுக்க காதல் காட்சிகளுடன் செல்லுகிறது,இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் நன்றக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.ஜி வி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இப்போதைய தலைமுறை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது,நிறைய புது முகங்களை வைத்து எடுத்திருந்தாலும்,ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ தன்னுடைய திறமையால் அற்புதமாக மேட்ச் செய்துள்ளார்.

மேலும் அனிகாவின் அப்பாவாக நடித்துள்ள சரத்துக்குமார்,சரண்யா பொன்வண்ணன்,ஆடுகளம் நரேன் ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு ரொம்ப பக்க பலமாக அமைந்துள்ளது,ஹீரோவின் நண்பராக நடித்துள்ள மேத்யூ தாமஸ் அவருடைய நடிப்பின் மூலம் நம்முடைய நெருங்கிய நண்பரை நினைவூட்டுகிறார்.

படத்தின் சொதப்பல்

படத்தில் ஹீரோவாக நடித்துள்ள பவிஷு தனுஷ் மாதிரி நடிக்க முயற்சி செய்து கொஞ்சோ கோட்டை விட்டுள்ளார்,படத்தில் காமெடியை செதுக்கிய அளவிற்கு எமோஷனல் காட்சிகளை செதுக்க தனுஷ் தவறவிட்டார்,படத்தின் பெரும்பாலான இடங்களில் ஜி வி யின் கைவண்ணமே படத்தை தாங்கி செல்கிறது,வழக்கமான கதையை கொண்டுள்ளதால்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்து முடித்த பிறகு நம்மை சற்று கோபத்தில் ஆழ்த்துகிறது.

குடும்பத்தோடு டைம் பாஸ் ஆக இப்படத்தை ஒரு தடவை தியேட்டரில் சென்று பார்க்கலாம்,மற்றபடி பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று தனுஷ் எதிர்பார்த்திருந்தால் அது அவருக்கு ஏமாற்றமே,ஹாட்ரிக் வெற்றியில் கொஞ்சோ கோட்டை விட்டார் என்று ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை பார்த்து வந்த ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!