பதுங்கி பாய்ந்தாரா அஜித்…ரசிகர்களை கவர்ந்ததா விடாமுயற்சி…படத்தின் திரை விமர்சனம்..!

Author: Selvan
6 February 2025, 4:15 pm

விடாமுயற்சி வெற்றி பெற்றதா.?

மகிழ் திருமேனி இயக்கத்தில்,லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் விடாமுயற்சி.இப்படத்தில் நடிகர் அஜித்துடன் திரிஷா,அர்ஜுன்,ஆரவ்,ரெஜினா உட்பட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி இருந்தே படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.இந்த நிலையில் இன்று உலகளவில் வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் ரசிகர்களை கவர்ந்ததா..படத்தில் மகிழ் திருமேனி கதையை கச்சிதமாக செதுக்கியுள்ளாரா என்பதை பார்ப்போம்..

Vidamuyarchi movie review

கதை கரு

காதல்,காமெடி,பாடல்,ஆக்ஷன் என வழக்கமான தமிழ் படங்கள் போல் இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி.அர்ஜூனாக நடித்திருக்கும் அஜித்தும்,கயல் ஆக நடித்திருக்கும் த்ரிஷாவும் 12 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்,இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் த்ரிஷாவுக்கு இன்னொருத்தர் மேல காதல் ஏற்பட்டு அஜித்தை விவாகரத்து பெற முடிவு செய்கிறார்.விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வரும் வரை திரிஷா தன்னுடைய அம்மா வீட்டில் இருக்க முடிவு எடுக்கிறார்.இதனால் தன்னுடைய மனைவியை நெடுந்தூர பயணமாக காரில் அழைத்து செல்கிறார்.அப்போது கார் நடுவழியில் ஒரு பாலைவனத்தில் பிரேக்டவுன் ஆகி நிற்கிறது.அப்போது அவர்களுக்கு உதவுவது போல அர்ஜுனும்,ரெஜினாவும் த்ரிஷாவை கடத்தி விடுகிறார்கள், அவர்களிடம் இருந்து தப்பித்து மனைவியை அஜித் கண்டுபிடித்தாரா,உண்மையான குற்றவாளி யார் என பல ட்விஸ்ட்களுடன் கதை நகருகிறது.

இதையும் படியுங்க: இரண்டு ‘ஹாலிவுட்’ படத்தின் காப்பி…பட்டி டிங்கரிங் செய்யப்பட்டதா விடாமுயற்சி..!

படத்தின் பிளஸ்

அஜித் வரும் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு மட்டுமே படத்தை முழுவதும் தாங்கி செல்கிறது.படத்தின் முதல் பாதியில் அஜித்,திரிஷா காதல்,சவதிகா பாடல் என ரசிகர்களை குதூகலப்படுத்தி விறுவிறுப்பாக சென்றுள்ளது.மேலும் இரண்டாம் பாதியில் அஜித்தின் கார் ரேஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் பார்ப்போரை கதி கலங்க வைத்துள்ளது .அனிருத் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.இரண்டாம் பாதி கொஞ்சம் சலுப்பை ஏற்படுத்தினாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளது.அஜர்பைஜான் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஹாலிவுட் தரத்தில் அற்புதமாக காட்டி அசத்தியுள்ளார்.

படத்தின் நெகட்டிவ்

படத்தில் அஜித் கதாபாத்திரம் தவிர மற்ற ரோல்களுக்கு இயக்குனர் முக்கியத்துவத்தை காட்ட தவறியுள்ளார்.படத்தின் இன்டெர்வல் காட்சியில் அஜித்தை சுடுவது போல காட்டி ரசிகர்களை சிறுபிள்ளை தனமாக ஏமாற்றியுள்ளார்.மேலும் அந்த பிரகாஷ் யார் என்று கடைசி வரை காட்டவில்லை,ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தை பார்த்தவர்களுக்கு இப்படம்,எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை,ஆனால் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சிறப்பான படமாக அமைந்தது. மொத்தத்தில் விடாமுயற்சி ஒரு தடவை மட்டும் பார்க்க கூடிய நார்மல் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!