விடுதலை 2–சிறப்பு விவரங்கள் மற்றும் விமர்சனங்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான விடுதலை 1 விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.இதன் தொடர்ச்சியாக, வெற்றிமாறனின் விடுதலை 2 இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
விடுதலை 2 வில் பெரும்பாலான காட்சிகள் விஜய்சேதுபதியை வைத்து நகர்கிறது.யார் இந்த பெருமாள் வாத்தியார்,எதற்காக இவர் போராடுகிறார் என்பதை விடுதலை 2 காட்டுகிறது.
வாத்தியார் விஜய்சேதுபதியை கைது செய்து ஜீப்பில் அழைத்து செல்கின்றனர்,அந்த ஜீப்பை நடிகர் சூரி ஓட்டி செல்கிறார்,அப்போது திடீரென ஒரு நடு காட்டிற்குள் மாட்டிக்கொண்டு எப்படி செல்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.
இதையும் படியுங்க: உருக்கமாக பேசிய கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்…கண் கலங்கிய ரசிகர்கள்..!
அப்போது விஜய் சேதுபதி கடந்த கால நிகழ்வுகளை இயக்குனர் காட்டுகிறார்.தனது கிராமத்து எதிராக, தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் கொடுமை, இனி அடுத்த தலைமுறைக்கு நடக்க கூடாது என்பதற்காக,கருப்பானாக நடித்த (கென் கருணாஸ்) ஒரு கொலை செய்கிறார்.
இதை அறிந்த விஜய் சேதுபதி,அவரை காப்பாற்றி ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். கருப்பனுக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது என போலீஸ் சொல்ல,அவரை போலீசில் ஒப்படைக்கிறார் விஜய் சேதுபதி.
ஆனால்,போலீஸ் துரோகம் செய்ய, கருப்பன் மற்றும் அவரது மனைவியை பண்ணை வீட்டாளர்கள் கொலை செய்கிறார்கள்.அப்போது விஜய் சேதுபதிக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
அவரை கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கிஷோர் காப்பாற்றுகிறார்.அதுவரை பள்ளியில் சாதாரண ஆசியராக பணிபுரிந்த விஜய்சேதுபதி,தன்னை சுற்றி நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகளையும்,உழைப்புச் சுரண்டல்களையும் பார்க்கிறார்.
அதன் பின்பு தன்னை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு தகுந்த சம்பளத்தை வாங்கி கொடுப்பதில் இருந்து தொடங்குகிறது பெருமாள் வாத்தியாரின் வேலை.அதே தொழிற்சாலையின் முதலாளியின் மகளாக மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியர்.
அவர் தன்னுடைய குடும்பத்தை எதிர்த்து மக்களுக்காக களத்தில் இறங்குகிறார்.அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து,ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாக போராடுகின்றனர்.
அப்போது ஆயுதம் ஏந்திய மக்கள் படை இயக்கத்தை உருவாக்கிறார்.அந்த சமயத்தில் இவரை காப்பாற்றிய கிஷோரை கொலை செய்கிறார்கள்.இதனால் கோவம் அடைத்த விஜய் சேதுபதி கொலை செய்தவர்களை தன்னுடைய மக்கள் படை வைத்து பழி வாங்குகிறார்.
இப்படி போலீஸாரிடம் தன்னுடைய கதையை கூறும் போது,அவர் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள் அவரை காப்பாற்ற வருகின்றனர்.பெருமாள் வாத்தியார் தப்பிய பிறகு காவல் துறை என்ன செய்தது,கதையை கேட்ட குமரேசன் (சூரி) யார் பக்கம் நின்றார் என்பதே படத்தின் மீதி கதை.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக,அதிகாரம் என்னென்னவெல்லாம் செய்யும், தனக்கு அதிகாரம் கிடைக்கும் போது ஒரு மனிதன் எப்படி அவர்களை எதிர்கொள்வான் என்பதை அழகாக காட்டியுள்ளார் வெற்றிமாறன் .
போலீஸ் உயர் அதிகாரத்தின் கட்டளைக்கு கீழ் வேலை செய்கிறார்களா?அல்லது மக்களுக்காக வேலை செய்கிறார்களா என கேள்வி எழுந்த நிலையில்,சூரி கடைசியில் எடுத்த முடிவு அருமையாக உள்ளது.
கென் கருணாஸ் சில நிமிடங்கள் படத்தில் வந்தாலும்,வாத்தியாரின் பாதைக்கு கென் கருணாஸின் வாழ்க்கை ஆரம்பமாக அமைந்துள்ளது.படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல்கள் கலவரத்திற்கு மத்தியில் ரசிகர்களை சற்று இளைப்பாற செய்கிறது.மொத்தத்தில் மக்களுக்கான ஒரு படமாக விடுதலை 2 அமைந்துள்ளது .