உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2025, 7:59 pm
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!
அதிபர் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது புதிய வரி விதித்துள்ளதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியாக உள்ளது என கூறினார்.

மேலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. இது பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒரு களங்கம் என குறிப்பிட்ட அவர், 238 வாக்குகள் ஆதரவும், 232 வாக்குகள் எதிராகவும் விழுந்துள்ளது.
நள்ளிரவிலும் எதிர்க்கட்சியை சேர்ந்த 232 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளது வரலாற்றில் முக்கிய பதிவு என பேசினார்.
அதே போல மாநிலங்களவையிலும், அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் வக்ப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஓட்டளித்து பாராட்டி வேண்டிய விஷயம். அடுத்த கூட்டத்தொடரில் இனி எந்த் சட்டத்தை கொண்டு வரப்போகிறார்களோ என்ற அச்சம்தான் எழுகிறது என அவர் கூறினார்.