விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம்.. சுங்கத்துறை அதிகாரிகளுக்கே ஷாக் கொடுத்த பயணி..!

Author: Vignesh
26 August 2024, 2:08 pm

கோவை விமான நிலையத்தில் ரூ.1கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் சுங்கவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது.

காலை 3.45 மணியளவில் கோவை வரும் விமானம் மீண்டும் அதிகாலை 4.30 மணியளவில் ஷார்ஜாவுக்கு புறப்பட்டு செல்லும். இன்று காலை ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!