சொகுசு காரில் சிக்கிய ₹1 கோடி.. விக்கிரவாண்டி அருகே பறிமுதல் ; சிக்கும் வேட்பாளர்? பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 6:31 pm

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி விழுப்புரம் – திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை பகுதியான கண்டாச்சிபுரம் அருகே உள்ள மழவந்தங்கள் கிராமத்தில் மாவட்ட எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக கண்டாச்சிபுரம் வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி, சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்துள்ளனர்.

அப்போது வாகனத்தில் இருந்த மதனகோபால் எனும் மருத்துவர் வாகனத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர், நடத்திய விசாரணையில் கோயம்புத்தூரில் தனது தகப்பனார் நிலத்தை விற்று தன்னிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும், அதனை சென்னை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் பணம் ஒப்படைக்க எடுத்துச் செல்ல உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் சொகுசு காரில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 255

    0

    0